மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

தெக்கத்தி மக்களின் வாழ்வியல் பேசும் ‘படைவீரன்’!

தெக்கத்தி மக்களின் வாழ்வியல் பேசும் ‘படைவீரன்’!

பாடகர் விஜய் யேசுதாஸ், இயக்குநர் பாரதிராஜா, புதுமுகம் அம்ரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படைவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

தெக்கத்தி மண் சார்ந்த பிரச்னைகளையும் அவர்களது வாழ்வியலையும் பேசுவனவாகப் பல படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அம்மக்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாகச் சொன்ன படங்களே வெற்றிக்கண்டிருக்கின்றன. இயக்குநர் பாரதிராஜாவின் பெரும்பாலான படங்கள் தெக்கத்தி மக்களின் வாழ்வியலை அசலாக சொன்னதால்தான் அவருடைய படங்கள் வெற்றிக்கண்டன. அவரை போன்றே பலரும் அந்த முயற்சியை மேற்கொண்டு வெற்றிக்கண்டதைவிட தோல்வி கண்டதே அதிகம். அந்த வகையில் தெக்கத்தி மக்களின் வாழ்வியலை பேசும் படமாக உருவாகி இருக்கிறது இந்தப் ‘படைவீரன்’.

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த தனா இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். தென் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையை காதல், வீரம், துரோகம் போன்று பல்வேறு விஷயங்களைப் பக்கா கமர்ஷியலாகத் தந்திருக்கிறார் என்பது ட்ரெய்லரைப் பார்க்கையில் தெரிகிறது.

படத்தின் ட்ரெய்லரில் அய்யனார் பட்டில ஒரு அர்ஜுனன் என விஜய் யேசுதாஸும், அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணனாக பாரதிராஜாவும், சண்டைக் காட்சியின்போது குருஷேத்திரம் என தெரிவிப்பதன் மூலம் மகாபாரதத்தின் பாணியில் இந்தப் படம் உருவாகியிருக்கலாம் என யூகம் எழுகிறது.

விஜய் யேசுதாஸ் வேலை செய்யாமல் ஊர் சுற்றித் திரியும் காட்சிகளையும், அவருக்கும் அம்ரிதாவுக்குமான காதல் காட்சிகளையும், போலீஸாவதற்கு பாரதிராஜாவிடம் ஐடியா கேட்கும் காட்சிகளையும் பார்க்கையில் அவர் நடிப்பில் மெருகேறி இருப்பதையே காட்டுகிறது. பெண்களைக் கிண்டல் செய்வது, ஊரின் முக்கியஸ்தர் என பாரதிராஜா முழுக்க கிராமத்து ஆளாகக் காட்சியளிக்கிறார். அருவி படத்தில் சின்னத்திரை இயக்குநராக நடித்த கவிதா பாரதிக்கும், அறிமுக நாயகியான சென்னை பெண் அம்ரிதாவுக்கும் இந்தப் படம் முக்கிய படமாக அமையும் என அவர்களது காட்சிகளை பார்க்கையில் கருத முடிகிறது.

தெக்கத்தி மக்களின் வாழ்க்கை முறைகளைப் பேசவிருக்கும் இந்தப் படைவீரன், படக்குழுவினருக்கு வெற்றியைத் தேடி தருமா என்பது பிப்ரவரி 2ஆம் தேதி தெரிந்துவிடும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018