மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

கார்த்திக் சிதம்பரத்துக்கு சம்மன்!

கார்த்திக் சிதம்பரத்துக்கு சம்மன்!

‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பிப்ரவரி 2ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை நேற்று (ஜனவரி 29) சம்மன் அனுப்பியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டுக்கான அனுமதி பெற்று தந்ததில் முறைகேடு என்ற புகாரின் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் மீது கடந்த ஆண்டு (2017) சிபிஐ வழக்கு தொடர்ந்திருந்தது.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஷீனா பேரா கொலை வழக்கில் தொடர்புடைய இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜிக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி பெற அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனத்திடம் அனுமதி பெறுவதில் முறைகேடு நடந்தது என்றும், இந்த முறைகேட்டில் விதிகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டில் இருந்து நிதி பெற உதவியதாகக் கூறி கார்த்திக் சிதம்பரத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ஆரம்பம் முதலே மத்திய புலனாய்வுத் துறை இந்த வாழ்க்கை விசாரித்து வந்தது. கார்த்திக் சிதம்பரம் வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்து வெளிநாடு சென்றுவிடாமல் இருக்க கடந்த நவம்பரில் (2017) அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரம் தனது மகனை லண்டனில் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும், அதற்காக தனக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அனுமதி பெற்றார். ஏற்கனவே, இந்த வழக்கில் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

செவ்வாய் 30 ஜன 2018