மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 ஜன 2018

பியூட்டி ப்ரியா: குங்குமப்பூ ப்ளீச்!

பியூட்டி ப்ரியா: குங்குமப்பூ ப்ளீச்!

விசேஷங்களுக்குப் போகும்போது அழகாக தெரிய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்தான். இதற்கு பியூட்டி பார்லருக்குத்தான் ஓட வேண்டும் என்பதில்லை.

இந்தக் குங்குமப்பூ ப்ளீச் செய்து பாருங்கள். குங்குமப்பூவை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன், முல்தானிமட்டி 2 டீஸ்பூன், வெந்நீர் சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். முகம், கழுத்து பகுதிகளில் ‘திக்’காக பூசி, ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். பியூட்டி பார்லருக்கு போய் ‘ப்ளீச்' செய்தது போல் பளிச்சென மின்னும்.

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை நீக்கி முகத்தை ஜொலிக்க வைக்கும் அசத்தல் டிப்ஸ் இதோ:

குங்குமப்பூவில் 10 பிசிறை எடுத்து, பாலில் ஊற வையுங்கள். நன்றாக ஊறியதும் அதை மசியுங்கள். அதை அப்படியே எடுத்து, முகத்தில் தடவுங்கள். உலர்ந்த பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவுங்கள். டவலால் அழுத்தமாகத் துடைக்காமல் ஒத்தி எடுங்கள். இப்போது கண்ணாடியில் முகத்தைப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்குச் சில வயது குறைந்திருக்குமாம்.

தோலைப் பளபளப்பாக்கி, சிகப்பு நிறத்தை அள்ளித்தரும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டில்தான் அதிகம் விளைகிறது. விலையும் அதிகம்தான். ஆனாலும், அழகு கலையில் முக்கிய இடம் வகிக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 30 ஜன 2018