பார்வைத்திறன் அற்றவர்கள் கார்களை இயக்கலாம்!


சென்னையில் ‘இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு’ என்ற நிகழ்ச்சியில் பார்வைத்திறன் அற்றவர்கள் வழிகாட்டுதலில், கார்களை இயக்கும் பேரணி நடத்தப்பட்டது.
தேசிய பார்வையற்றோருக்கான சங்கத்தின் தமிழகக் கிளை சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 29ஆவது ஆண்டாக நேற்று (ஜனவரி 28) நடந்த இந்தப் பேரணி, ராயப்பேட்டை சவேரா ஓட்டலிலிருந்து தொடங்கியது.
இதில் பங்கேற்ற பார்வைத்திறன் அற்ற ஒருவர் தனக்கு பிரெய்லி முறையில் தரப்பட்டிருக்கும் வழித்தட விவரங்களைக்கொண்டு வழிகாட்டுவார். அதைப் பின்பற்றி பார்வைத்திறன் கொண்ட ஓட்டுநர், காரை இயக்குவார்.
இதே முறையில் 45 கார்களும் இயக்கப்பட்டு, குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தைக் கடப்பவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இதனிடையே, செல்லும் வழியில் உள்ள கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கட்டளையையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.