மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

நயன்தாரா திரை வாழ்வில் முதன்முறையாக?

நயன்தாரா திரை வாழ்வில் முதன்முறையாக?

கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகவிருக்கும் இந்தியன் 2இல் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் 2.0 படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளில் வேகம் காட்டிவரும் ஷங்கர் இந்தியன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 20 வருடங்களுக்கு அதன் இரண்டாம் பாகத்தை கமலுடன் இணைந்து உருவாக்கவிருக்கிறார். இது குறித்தான அறிவிப்பை தைவான் நாட்டில் படக் குழுவுடன் பலூன் ஒன்றை பறக்கவிட்டு உறுதிப்படுத்தினார். இப்படத்தின் கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியனில் சேனாதிபதி, சந்திரபோஸ் என்ற இரண்டு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக மனீஷா கொய்ராலா, சுகன்யா ஆகியோர் நடித்திருந்தனர். 70 வயதான சேனாதிபதி கேரக்டரில் ஊழலுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப் போராட்ட தியாகியாக கமல்ஹாசன் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படமும் அரசியல், சமூகப் பிரச்சினைகளைப் பேசும் படமாக உருவாகவிருக்கிறது. அரசியலில் களமிறங்கியிருக்கும் கமலுக்கும் இந்தப் படம் பக்கபலமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

இந்தப் படத்தில் ஒரு புரட்சிகரமான பெண் வேடத்திற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே நயன்தாரா அறம் படத்தில் மக்கள் பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் கலெக்டர் வேடத்தில் துணிச்சலாக நடித்திருந்ததால் இப்படத்தில் அவரை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் வடிவேலுவும் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018