மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

அரசின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு!

அரசின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு!

2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7 முதல் 7.5 சதவிகிதம் வரையில் இருக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி ஜனவரி 29ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்தார். அந்த ஆய்வறிக்கையில், ‘கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சில பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் வருகிற 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 முதல் 7.5 சதவிகிதம் வரை உயரும். இதன் மூலம், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற பெயரை இந்தியா மீண்டும் தனதாக்கும். கடந்த மூன்று ஆண்டுகளின் சர்வதேச பொருளாதார வளர்ச்சி அளவை விட இந்தியாவின் வளர்ச்சி 4 சதவிகிதம் அதிகமாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 29 ஜன 2018