கொச்சி: தேயிலை விலை உயர்வு!


இந்த வாரத்துக்கான கொச்சி தேயிலை ஏலத்தில் பல்வேறு தேயிலை வகைகளின் விலை 3 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த வாரத்துக்கான ஏலத்தில் (விற்பனை எண் 4) சிடிசி தூள் வகைத் தேயிலை மொத்தம் 9,27,000 கிலோ விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது. உள்நாட்டு வர்த்தகர்களும் ஏற்றுமதியாளர்களும் மொத்தம் 8,000 கிலோ அளவிலான தேயிலையை வாங்கிச் சென்றனர். கொச்சி சிடிசி தூள் வகை ரூ.121 முதல் ரூ.165 வரையிலும் (முதல் தரம்), ரூ.89 முதல் ரூ.137 வரையிலும் (நடுத்தரம்) ஏலம் போனது. இலை வகையைப் பொறுத்தவரையில் மொத்தம் 1,86,500 கிலோ அளவிலான தேயிலை விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது.