மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

ஆங்கிலத்தில் சொடக்கு பாடல்!

ஆங்கிலத்தில் சொடக்கு பாடல்!

’சொடக்கு மேல சொடக்கு போடுது...’ பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்’. பொங்கலுக்கு வெளியான இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடலில் உள்ள சில வரிகளை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி சதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், சொடக்கு மேல சொடகுக்கு போடுது பாடலில் உள்ள ‘அதிகாரத் திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என்ற வரிகள் வன்முறையைத் தூண்டும் விதத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாகவும், இந்த வரிகளை நீக்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 29 ஜன 2018