மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

தொடரும் மாணவர்கள் போராட்டம்!

தொடரும் மாணவர்கள் போராட்டம்!

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக அரசு உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று (ஜனவரி 29) 5ஆவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி வாயில் முன்பு திரண்டு, பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறும்வரை, தங்கள் போராட்டம் தொடரும் என முழக்கமிட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து சுமார் 2700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து திருப்பூரில் மகளிர் கல்லூரி மாணவிகள், திருப்பூர் குமரன் கலைக் கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கல்லூரி வாயில் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், கல்லூரி பேராசிரியர்களிடமும் மாணவிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வகுப்பறைக்கு அனுப்பிவைத்தனர்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 29 ஜன 2018