மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

6 வருடம் என்ன செய்தீர்கள்?

6 வருடம் என்ன செய்தீர்கள்?

கட்டண உயர்வுக்குக் காரணம் திமுகதான் என்று கூறும் அதிமுக அரசு, கடந்த 6ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேருந்துக் கட்டணம் 100 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், இதனை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த 27ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பேருந்துக் கட்டணத்தை ஒரு ரூபாய் வீதம் குறைத்து அரசு அறிவித்தது. ஆனால் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மறியலில் ஈடுபட்டுக் கைதானவர்களை நடிகர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜனவரி 29) சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் அரசியலுக்கு திடீரென்று வரவில்லை. பிறந்ததிலிருந்து அரசியலில்தான் உள்ளேன். கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன். பதவிக்காக நான் வரவில்லை. நான் பல காலமாக கட்சிப் பணி செய்து வருகிறேன். எனவே ரஜினி, கமலுடன் என்னை ஒப்பிடாதீர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கிறேன்" என்றார்.

மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நீதிமன்றம்தான் முடிவுக்குக் கொண்டுவந்தது. அதற்காக அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டணத்தை 100 சதவிகிதம் வரை உயர்த்திவிட்டு தற்போது குறைந்த அளவில் குறைத்திருப்பது வெறும் கண்துடைப்பு. அரசின் மீது பொதுமக்கள் விரக்தியில் உள்ளனர்" என்று கூறினார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 29 ஜன 2018