ஹலோ ரஷியாவா, ஸ்டாலின் எப்ப செத்தாரு? -அப்டேட் குமாரு

இன்னைக்கு நடந்த போராட்டக் கூட்டத்துல கடைசியா நின்னுட்டிருந்தேன். பக்கத்துல ஒருத்தர், முழுசையும் கட் பண்ண சொன்னா கொஞ்சமா கட் பண்ணிட்டு இது போதும்ங்குறானுங்க ராஸ்கல்ஸ். பணம் போனா போகுது, எங்க உணர்வுகளை மதிக்கிறாங்களான்னு பாரு. இப்படியே நடந்தா சோடா பாட்டிலை உட்டு எறியணும்னு சொன்னார். ஆமா, நீங்க என்ன போராட்டம் பண்றீங்கன்னு கேட்டா, பத்மாவதி படத்துக்கு எதிரா போராடிகிட்டு இருக்காராம். அட டூமாங்கோலி, இது பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரா நடக்குற போராட்டம்னு சொன்னதும். பக்கத்துல இருக்க தியேட்டருக்கு ஆட்டோ ஏறிப் போனாரு. அப்பறம் பாத்தா, அந்த தியேட்டர்ல பாகமதிதான் ஓடுதாம். பத்மாவதி ஓடலயாம். பகோடா வித்து 200 ரூவா சம்பாதிக்கிறவங்களுக்கு கூட எந்த தியேட்டர்ல எந்த படம் ஓடுதுன்னு தெரியும். ஆனால், நம்மாளுங்களுக்கு அதுவும் தெரியல. இது பரவால்ல, ஒரு ரூவா கொடுத்தா பிச்சைக்காரன் முகத்தைக்கூட பாக்கமாட்டான்னு சொல்லிட்டு, பைசா கணக்குல பேருந்து கட்டண விலையை குறைச்சவங்களுக்கு எங்க சிலை வைக்குறதுன்னு தெரியல. சிலைன்னதும் நியாவகம் வருது. ஜெயலலிதா இறந்துபோனது என்னைக்குன்னு தெரிஞ்சுக்க போராடிக்கிட்டிருந்த திமுக-வினர், இன்னைக்கு ரஷிய புரட்சியாளர் ஸ்டாலின் இறந்தது என்னைக்குன்னு தேடிக்கிட்டிருக்காங்க. என்கிட்டயும் ரெண்டு பேர் கேட்டிருக்காங்க. கண்டுபுடிச்சு சொல்லிட்டு வர்றேன், அதுக்குள்ளார அப்டேட் படிச்சிடுங்க.
சித்ரா தேவி
கலைஞர் தீர்க்கதரிசின்னு எப்படி சொல்ற ?
பின்ன? 5ம்தேதி ஸ்டாலின் இறக்கப்போறத முன்னாடியே தெரிஞ்சு 1ம் தேதியே இரங்கல் கூட்டம் போட்டு அன்னிக்குப் பிறந்த தன் பையனுக்கு ஸ்டாலின்னு பேரும் வச்சிட்டாரே...
@senthilcp
வைரமுத்து உள்ளே வந்து மன்னிப்பு கேட்க விருப்பம் இல்லையெனில் வெளியில் நின்றாவது மன்னிப்பு கேட்கலாம்- ஜீயர்
வெளியில்"நின்று மன்னிப்புக்கேட்க விருப்பம் இல்லை எனில் வீதியில் நின்றவாறே"அட்லீஸ்ட்"ஒரு"சாரி யாவது சொல்லவும்
@itzEzhilvizhi
கல் திடமாக இருந்து நதியிடம் தோற்றுப் போகிறது. சருகு மென்மையாக இருந்து நதியிடம் கை குலுக்குகிறது. மென்மையாக இருப்பது உயிர்த்திருப்பது.
மென்மையான எதுவுமே அதிகம் வசீகரிக்கிறது.
அடமழையைவிட அதிகம் ஈர்க்கும் சாரல் போல்..
@rascalpk
ஒரு தடைவ செஞ்சிதான் பாப்போமே என்பதில் தொடங்கிகிறது வாழ்க்கையின் முதல் தவறு
@ajmalnks
பக்கோடா விற்பவன் கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறான். இதுவும் வேலைவாய்ப்பு தானே- மோடி
அதில் அவன் அன்றாட வாழ்க்கைக்கே ஒரு தொகையை ஜி.எஸ்.டி.யாய் கட்டிடுறானே...
@SaranyaaaRaj
சந்தோஷத்திற்கு காரணமாக இருக்கும் அதீத அன்பே
வெறுப்பிற்கும் காரணமாகிறது
என உணர மறுக்கிறது அன்பு புகுந்த இதயம்....!!
@LazyBae_Mehnaaz
இவர்கள் தான் வேண்டும் என்று சுயம் இழந்து வாழ்வதை விட...
இருப்பவர்கள் மட்டுமே போதும் என்ற திமிருடன் வாழ்வது மேல்..
@mofra2
ஆங்கிலம் பேச தெரியாமல் அவமானமாக நினைத்து வருந்தி கொண்டு அமைதியாக இருப்பதை விட
தமிழ் மொழியை பேசிவிட்டு #தாய்மொழி இது என் #தன்மானம் என்று நகர்ந்து விடலாம்!!!
@SKtwtz
பணத்தை , அறிவை பிச்சை கேட்டாலும்
அன்பை மட்டும் யாரிடமும் பிச்சை கேக்காத வாழ்க்கை போதும்...
@Chellakutty_Dee
ஒரு கட்சில ஒன்னு ரெண்டு
பேர் பைத்தியமா இருந்த
போனா போகட்டும்னு விடலம்
ஆனா இங்க தொண்டன்ல
இருந்து கட்சி தலைவர்கள் முதல்கொண்டு எல்லா பயலும் பைத்தியமா இருக்காங்களே
அது எப்படி
காவி_கூட்டம்
@BubblyGirl*
வாழ்க்கைப் பாதையில்
அன்பும் அறிவும் வாகனத்தின் முன் மற்றும் பின் சக்கரங்கள் போன்றவை,
அறிவால் எப்போதுமே
அன்பை முந்திச்செல்ல முடியாது.
சக்திமான்
எவ்வளவு பெரிய உத்தமனா இருந்தாலும், டிவிட்டர் வந்துட்டா எதாவதும் ஒரு பொண்ண ஃபாலோவ் பண்ணிட்டுதான் இருப்பான்.
தமிழினி
ஊழல் நடக்கும்போது மக்கள் கூட தியானத்தில் தான் இருந்தார்கள் - கமல்
நீங்க கூட தான் ஷூட்டிங்க்காக வெளிநாடு போய்ட்டிங்க...
புதிய பறவை
ஆமாம் உதயநிதி என்பது தமிழ் பெயரா? சும்மா ஒரு டவுட்- எச்.ராஜா
நிமிர் படத்துக்கு ப்ரமோஷன் ஸ்டார்ட் பண்ணிட்டாப்ல
Lazy devil girl priya
கண்ணகி ஒருத்திக்காக மதுரையை எரித்தது எப்படி தவறோ....
எதிரி தேடி வந்தது பத்மாவதியை மட்டுமே. ஆனால் ஒட்டுமொத்த பெண்களையும் தீக்குளிக்க வைத்தது தவறு. (பத்மாவதி)
Mrs.Banupriya
ஒவ்வொரு பெண்ணும் திருமணத்திற்கு பிறகு முதலில் வெறுக்கும் நபர் கணவரின் பெஸ்ட் பிரண்ட் தான்
சகாய ராணி
ஒரு தடவ பத்மாவதி மூஞ்சிய பாத்திருந்தா நம்ம பேகமே அவ்வளவு அழகுனு போயிருப்பாப்ல....
ஷிவானி சிவக்குமார்
"பக்கோடா விற்பவன் கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறான். இதுவும் வேலைவாய்ப்பு தானே" - மோடி ட்வீட்
பிச்சை எடுக்கறவன் கூட தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கிறான். இதுவும் உங்கள் ஆட்சியில் வேலைவாய்ப்பு தானா? - ப. சிதம்பரம் பதில்
கோழியின் கிறுக்கல்
இனிமே அலுவலக மீட்டிங்ல தூங்கினா மேனேஜர் கிட்ட "உங்கள தெய்வமா மதிக்கிறதால உங்க பேச்ச கடவுள் வாழ்த்தா நினைச்சு தியானம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்"ன்னு சொல்லி சமாளிக்க வேண்டியது தான்!!
உடன்பிறப்பே
ஒரு டாக்டர்.பொண்ணு நோ சொன்னா, நர்ஸ்சு பொண்ணை காதலிக்குறதில்லையா ?
அது மாதிரிதான், என் கட்சிக்காரன், பத்மாவதி திரைப்படத்துக்கு பதிலா, பாகமதி படத்தை எதிர்த்து போராட்டம் பண்ணிருக்கான்.
அதுக்காக..பச்சபுள்ளைனு பார்க்காம, இப்படியாயா கலாய்ப்பீங்க ?
-லாக் ஆஃப்.