மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

எட்டுப் பெண்களை ஏமாற்றியவர் கைது!

எட்டுப் பெண்களை ஏமாற்றியவர் கைது!

எட்டுப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து தலைமறைவாக இருந்த புருஷோத்தமன் நேற்று கோவையில் பிடிபட்டார்.

கோவை வெள்ளலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்ற 57 வயது நபர் மனைவியை இழந்தவர். இவருக்கு 20 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்ய முடிவுசெய்த புருஷோத்தமன், அங்கிருந்த திருமணத் தகவல் நிலையம் ஒன்றில் பதிவு செய்தார். அதன் பின் கடந்தாண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த குமுதவள்ளியைத் (வயது 45) திருமணம் செய்தார்.

திருமணம் முடிந்த சில நாட்களில், தொழிலை விரிவாக்கம் செய்ய குமுதவள்ளியின் பெற்றோரிடம் ரூ.3 கோடி பணம் வாங்கியுள்ளார். மேலும் சொத்துகளை விற்றுப் பணம் தருமாறு நச்சரித்துள்ளார். இதனையடுத்து அவரைப் பற்றித் தீவிரமாக விசாரித்ததில் புருஷோத்தமன் பல பெண்களைத் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதும், இதற்கு திருமணத் தகவல் மைய நிர்வாகிகளும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து புருஷோத்தமன் தலைமறைவானார்.

இது குறித்து குமுதவள்ளி கிழக்குப்பிரிவு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், புருஷோத்தமன் முதலாவதாக சபீதா என்பவரைத் திருமணம் செய்து விவாகரத்து செய்ததும், பின்னர் உஷாராணி என்பவரைத் திருமணம் செய்து, அவர் இறந்ததும் தெரியவந்தது. பின்னர் விமலா, இந்திராகாந்தி, சாந்தி, சித்ரா, குமுதவள்ளி ஆகியோரைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் கோவையைச் சேர்ந்த சுசிலாவையும் திருமணம் செய்தது விசாரணையில்தெரியவந்தது. இது அவருக்கு எட்டாவது திருமணம்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 29 ஜன 2018