மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

மக்களைச் சந்திக்கும் தினகரன்

மக்களைச் சந்திக்கும் தினகரன்

ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திக்கவுள்ளார்.

டி.டி.வி. தினகரன் எம்எல்ஏ தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவரது ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் விரோத, துரோக அரசால் மக்கள் சுரண்டப்படுகின்றனர். டெல்லியின் காலடியில் சுருண்டு கிடக்கும் முதுகெலும்பில்லாத இந்தச் சுயநல ஆட்சிக்கு முடிவுகட்டச் சபதம் ஏற்போம்” என்று கூறியுள்ளார்.

மக்கள் சந்திப்பு புரட்சிப்பயணம் என இந்தச் சுற்றுப்பயணத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்டச் சுற்றுப்பயணம் தஞ்சையில் பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆம் தேதி திருவிடைமருதூரிலும் 3ஆம் தேதி குடந்தையிலும் 4ஆம் தேதி பாபநாசம் தொகுதியிலும் 5ஆம் தேதி திருவையாறு தொகுதியிலும் தினகரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 29 ஜன 2018