மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

கிராமி விருது 2018: 6 விருதுகளை வென்ற பாடகர்!

கிராமி விருது 2018:  6 விருதுகளை வென்ற பாடகர்!

அமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகளில் அமெரிக்க பாப் இசைப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளைத் தட்டிச்சென்றார்.

1959ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க இசைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்த வகையில் 2018ஆம் ஆண்டு, 60ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் அரங்கில் நேற்று நடந்தது. இதுவரை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் மட்டுமே நடந்துவந்த கிராமி விருதுகள் வழங்கும் விழா முதல் முறையாக நியூயார்க் நகரில் இந்த முறை நடத்தப்பட்டது.

கிராமி விருதுகள் வழங்கும் விழாவுக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் பலர் வந்திருந்தனர். அவர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கினார்.

32 வயதான அமெரிக்கப் பாடகரும், பாடலாசிரியருமான புருனோ மார்ஸ் , மற்றுமொரு அமெரிக்க ராப் பாடகரும், பாடலாசிரியருமான கென்ரிக் லாமர் ஆகிய இருவர் மட்டும் இந்தாண்டுக்கான பெரும்பாலான கிராமி விருதுகளைத் தட்டிச்சென்றனர். அதில் புருனோ மார்ஸுக்கு 6 கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. இவர் 7 பிரிவுகளுக்கு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 6 விருதுகளைப் பெற்றார். அவர் இசையமைத்து, எழுதி, பாடிய “24 மேஜிக்“ எனும் பாடல் 2018ஆம் ஆண்டின் சிறந்த பாடலாகத் தேர்வு பெற்றது. லாமரின் ராப் இசைத் தொகுப்பான "டூர் டி போர்ஸ்" இந்தாண்டுக்கான சிறந்த இசைத் தொகுப்புக்கான விருதை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ஸ் அந்த விருதைப் பெற்றது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

சிறந்த புதிய கலைஞருக்கான விருதை வென்ற அலஸ்சியா கரா மட்டும்தான் இந்த ஆண்டில் முக்கிய கிராமி விருதொன்றை வென்ற ஒரே பெண். இந்த ஆண்டு வழங்கப்பட்ட 86 கிராமி விருதுகளில் வெறும் 17ஐ மட்டுமே பெண்களோ அல்லது பெண்களால் முன்னிறுத்தப்பட்டுச் செயல்படும் குழுக்களோ பெற்றனர். பாலியல் வன்முறையையும் சமத்துவமின்மையையும் எதிர்க்கும் வகையில் பெரும்பாலான பங்கேற்பாளர்கள் வெள்ளை நிற ரோஜாவை அணிந்திருந்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018