மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

எம்.ஆர்.ஐ. எந்திரத்துக்கு இரையான வாலிபர்!

எம்.ஆர்.ஐ. எந்திரத்துக்கு இரையான வாலிபர்!

மும்பை தனியார் மருத்துவமனை ஒன்றில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எந்திரத்தின் காந்தப்புலத்தால் ஈர்க்கப்பட்டு, வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை லால்பாக் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மரு, தனது உறவினருக்குத் துணையாக நாயர் மருத்துவமனைக்கு நேற்று சென்றிருந்தார். அந்த மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் காந்த அதிர்வுகளின் பிம்பத்தைப் பதிவு செய்யும் எம்.ஆர்.ஐ. எந்திரம் உள்ளது. இந்த எந்திரம் இயக்கப்படும்போது அதில் இருந்து பெருமளவில் காந்த அலைகள் வெளியாவதால், யாரும் இந்த அறைக்குள் உலோகப் பொருட்களை எடுத்துச்செல்லக் கூடாது.

ஆனால் ராஜேஷ், மருத்துவமனைக்குச் சென்றபோது, வார்டு உதவியாளர் உலோகத்தால் ஆன ஆக்சிஜன் சிலிண்டரை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறைக்குக் கொண்டுவந்து உதவுமாறு கூறியுள்ளார். ராஜேஷும் சிலிண்டரை எடுத்துச் சென்றார். அப்போது ராஜேஷ் ஆக்சிஜன் சிலிண்டரோடு சேர்த்து, எம்.ஆர்.ஐ. எந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு மரணமடைந்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018