மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

இறுதியில் தோற்ற சாய்னா

இறுதியில் தோற்ற சாய்னா

இந்தோனேசியாவில் நடைபெற்றுவரும் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியைத் தழுவினார்.

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் தொடர் கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்தது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் இருவரும் பலப்பரிட்சை நடத்தினர். அதில் சாய்னா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா, சீனாவின் தாய் சூ யிங் உடன் மோதினார். அதில் முதல் செட்டை 21-9 என தாய் சூ யிங் கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தாய் சூ யிங் இரண்டாவது செட்டையும் 21-13 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.

இதுவரை சீனாவின் தாய் சூ யிங், சாய்னா இருவரும் 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். அதில் ஒரு முறை மட்டுமே சாய்னா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018