மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

கனிமவளத் துறை இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவு!

கனிமவளத் துறை இயக்குநர் விளக்கமளிக்க உத்தரவு!

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள கல்குவாரிகள், அவற்றிற்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள் குறித்து கனிமவளத் துறை இயக்குநருக்கு நாளை (ஜனவரி 30) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ”மதுரைப் பெருமாள் மலைப்பகுதியில் கல்குவாரிகள் அமைக்க அப்பகுதியிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டுவருகின்றன. அதனால், கல்குவாரிகள் அமைக்க தடை விதிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெருமாள் மலைப்பகுதியில் கல்குவாரி அமைக்க நடந்துவரும் பணிகளை நிறுத்திவைக்குமாறு மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018