மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

பேருந்து கட்டணக் குறைப்புக்கு வரவேற்பு!

பேருந்து கட்டணக் குறைப்புக்கு வரவேற்பு!

தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக, நேற்று (ஜனவரி 28) தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘இது வரவேற்கத்தக்கது’ என்று கூறியுள்ளார்.

பேருந்து கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி, தமிழகம் முழுவதும் பொதுமக்களும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும், கடந்த ஒரு வார காலமாகப் பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியாது என்று தெரிவித்துவந்தனர் தமிழக அமைச்சர்கள். இந்த நிலையில், நேற்று அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் உயர்த்தப்பட்ட பயணக் கட்டணம் குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு.

திமுக நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்தில், இது கண் துடைப்பு செயல் என்று விமர்சிக்கப்பட்டது. இதற்கு நேரெதிராக, பேருந்து கட்டணக் குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

நேற்று கன்னியாகுமரி மாவட்டம் புங்கரையில் நடந்த கோயில் விழாவொன்றில் அவர் கலந்துகொண்டார். அதன்பின், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தமிழக அரசு பயணக்கட்டணத்தைக் குறைத்துள்ளது; மக்களுக்குச் சுமை ஏற்றாமல், இன்னும் கொஞ்சம் குறைத்தால் நல்லது” என்று பேசினார். அதோடு, “எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களும் மறியல்களும் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது” என்றார்.

புதிய பறவைகள் நெடுந்தூரம் பறக்காது என்று ரஜினி மற்றும் கமல் பற்றி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இது குறித்துப் பேசிய தமிழிசை, “அங்கே ராகுல் காந்தி; இங்கே உதயநிதி ஸ்டாலின். ஆதலால், இந்த நாட்டில் குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குடும்பப் பறவைகளும் வாரிசுப் பறவைகளும் நீண்ட தூரம் பறக்காது” என்று தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018