மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

சாலை அமைப்புத் திட்டத்தில் இலக்கு!

சாலை அமைப்புத் திட்டத்தில் இலக்கு!

அடுத்த 14 மாதங்களில் ஒரு மணி நேரத்துக்குச் சராசரியாக 10 கிலோ மீட்டர் அளவிலான சாலையை அமைத்திட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியக் குடியிருப்புப் பகுதிகள் அனைத்தையும் 2019ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இணைக்க வேண்டும் என்ற திட்டத்தில் உள்ள கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், அடுத்த 14 மாதங்களில் 1 லட்சம் கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமானால் தினசரி ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தது 9.92 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை அமைக்க வேண்டும். இதுவரையில், பிரதம மந்திரி கிராமப்புற சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ், இந்தியக் கிராமப் புறங்களில் மொத்தம் 5,23,163 கிலோ மீட்டர் அளவிலான சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் கூறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்குத் தேவையான நிதியில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும் எஞ்சிய தொகையை மாநில அரசுகளும் செலவிடுகின்றன. அதேபோல, ’பாரத்மாலா’ திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் கோடி முதலீட்டில் 83,000 கிலோ மீட்டர் அளவிலான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு 2017-18 நிதியாண்டில் ரூ.64,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2018-19 மத்திய பட்ஜெட்டில் ரூ.25,000 கூடுதலாக வழங்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ.90,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018