மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

பள்ளி முதல்வர் மகன் பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை!

பள்ளி முதல்வர் மகன் பாலியல் தொல்லை: மாணவி தற்கொலை!

பள்ளி முதல்வரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதற்கு எடுத்துக் காட்டாக அடுத்தடுத்து ஏதேனும் ஒரு சம்பவம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் பயின்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளி முதல்வரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று பள்ளி முதல்வர் அழைப்பதாக மாணவிக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து அந்த மாணவி பள்ளி முதல்வரின் அறைக்குச் சென்றுள்ளார். அங்கு பள்ளிமுதல்வருக்கு பதிலாக அவரது மகன் இருந்துள்ளார். அப்போது மாணவியிடம் தவறுதலாக நடந்துகொண்டு, இதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதைக் கவனித்த வேறு சிலர் மாணவியின் சகோதரரிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் முதல்வரின் மகனுடன் சண்டை போட்டுள்ளார். இதில் மனமுடைந்த மாணவி வீட்டு அறையில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் மாணவியின் குடும்பத்தினர் கவுரி பசார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018