மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

கட்டண உயர்வுக்குக் காரணம் திமுக: எடப்பாடி

கட்டண உயர்வுக்குக் காரணம் திமுக: எடப்பாடி

கட்டண உயர்வுக்குக் காரணம் திமுக ஆட்சிக் காலத்தில் விட்டுச்சென்ற நிலுவைத் தொகைகளே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழகம் முழுவதும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் இரண்டாவது கட்டமாக இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. மேலும் தீவிரப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 29) உறுப்பினர் சேர்க்கையைத் துவங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "தற்போது போக்குவரத்துக் கழகம் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகம் பெற்ற கடன் 3,392.15 கோடி. தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை 922.24 கோடி, பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை 1,528.05 கோடி. இவையெல்லாம் திமுக ஆட்சிக் காலத்தில் விட்டுச் சென்றவை. மேலும் போக்குவரத்து கழகத்திற்குச் சொந்தமான 112 சொத்துக்களை அடமானம் வைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் டீசல் விலை படிப்படியாக பலமுறை உயர்ந்துள்ளது. வாகன உதிரி பாகங்களின் விலையும் உயர்ந்துவிட்டது, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், புதிய பேருந்துகள் வாங்குவதென்றால் விலை 30-40 சதவிகிதம் வரை உயர்ந்துவிட்டது எனப் பேருந்து கட்டண உயர்வுக்கு பல்வேறு காரணங்களையும் முதல்வர் பட்டியலிட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 12 கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. கட்டண உயர்வுக்குப் பிறகு கூட நாள் ஒன்றுக்கு நான்கு கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துவருகிறது என்றும் விளக்கம் அளித்தார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

திங்கள் 29 ஜன 2018