மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

மகுடத்தை இழந்த மன்னர் வகையறா!

மகுடத்தை இழந்த மன்னர் வகையறா!

இராமானுஜம்

நகைச்சுவை உணர்வுடன் படங்களை இயக்குபவர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தொலைக்காட்சி காமெடித் தொகுப்பில் எப்போதும் தவிர்க்க முடியாதவை. அப்படிப்பட்ட பூபதி பாண்டியன் இயக்கிய படமா மன்னர் வகையறா என்று அதிர்ச்சியுடன் பார்க்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

விமல், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ ஜனவரி 26ஆம் தேதி வெளியானது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருந்தாலும் இயக்குனர் என்ன கதை சொல்ல வருகிறார் என்பது குழப்பமாகவே இருப்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் பார்வையாளர் எண்ணிக்கை சரிவை நோக்கிப் போனது.

பல ஊர்களில் இரண்டாம் நாள் படம் தூக்கப்பட்டு வேறு படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பைனான்ஸ் பிரச்சினை, வியாபாரப் பிரச்சினை என அனைத்தையும் கடந்து 253 தியேட்டர்களில் வெளியான மன்னர் வகையறா முதல் நாள் மொத்த வசூல் 50 லட்சத்திற்கும் குறைவு.

மன்னனர் வகையறா கடந்த மூன்று நாட்களில் 253 திரைகளில் வசூல் செய்த தொகை ஒரு கோடியே என்பத்தி ஐந்து லட்சம்.

வசூல் குறைவாக இருந்தாலும் தியேட்டர்களில் வேறு படங்களை உடனடியாகத் திரையிட முடியாது.வரும் வியாழக்கிழமை வரை மன்னர் வகையறா படத்தைத்தான் ஓட்ட வேண்டியிருக்கும் என்கிறது தியேட்டர் வட்டாரம்.

விமல் சொந்தமாகத் தயாரித்த படம் மன்னர் வகையறா. 9 கோடி பட்ஜெட்டை விழுங்கியுள்ள இப்படத்தின் வெற்றி நடிகர் விமலின் திரையுலகப் பயணத்திற்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018