மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

பச்சை குத்தியிருந்தால் வேலை கிடையாது!

பச்சை குத்தியிருந்தால் வேலை கிடையாது!

உடம்பில் பச்சை குத்தியிருந்தால் (டாட்டூ) விமானப் படை வேலையில் சேர முடியாது என்பதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

விமானப் படையில் சேருவதற்கான தனது பணி நியமன ஆணை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் உடம்பில் நிரந்தரமான டாட்டூ எனப்படும் பச்சைக் குத்தியிருந்ததால், பணி நியமனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக விமானப் படை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ரேகா பள்ளி ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவில், "பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தபோது, டாட்டூ வரைந்திருந்தால் விமானப் படையில் வேலை கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கின் கீழ் மனுதாரர் வர மாட்டார். உடம்பில் டாட்டூ குத்தியிருந்தால் அது தொடர்பான புகைப்படத்தை அனுப்ப வேண்டுமென்ற விதிமுறையையும் மனுதாரர் முறைப்படி செய்யவில்லை. அதனால் விமானப் படை அவரது வேலை நியமனத்தை ரத்து செய்தது செல்லுபடியாகும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018