மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

போர்க்களமான சூப்பர் மார்க்கெட்டுகள்!

போர்க்களமான சூப்பர் மார்க்கெட்டுகள்!

நியூடெல்லா சாக்லேட் மற்றும் நட்ஸ் அடங்கிய பாட்டில் ஒன்று 70 சதவிகிதச் சலுகையுடன் விற்கப்படுவதால் ஃபிரெஞ்ச் சூப்பர் மார்க்கெட்டுகள் பரபரப்பாகக் காணப்படுகிறது.

தொழில் முன்னேற்றத்துக்காக, அதிக விலை மற்றும் மிகுந்த சுவை கொண்ட நியூடெல்லா சாக்லேட் மற்றும் நட்ஸ் பாட்டில் ஒன்றை 70 சதவிகித சலுகையுடன் விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது 950 கிராம் எடை கொண்ட ஒரு நியூடெல்லா பாட்டிலின் விலை 4.70 யூரோக்கள் (5.85 டாலர்) முதல் 1.41 யூரோக்கள் (1.75 டாலர்) வரை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி சலுகையால் ஃபிரெஞ்சு சூப்பர் மார்க்கெட்டுகள் போர்க்களமாகக் காட்சியளிக்கின்றன. ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வாங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கடையில் நுகர்வோர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நியூடெல்லா பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். கடைக்காரர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சிலருக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் போட்டிப் போடுவதைக் காணமுடிகிறது.

இதனால் அங்கு கலவரமாகக் காணப்படுகிறது. ஆஸ்திரிகோர்ட் பகுதியில் கடைக்காரர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். பதற்ற நிலை நிலவுவதால் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018