மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வாரா ரெய்னா?

வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்வாரா ரெய்னா?

இந்திய அணியில் ஒரு வருட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் சுரேஷ் ரெய்னா இடம் பெற்றுள்ளார்.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்கள் நடைபெறவுள்ளன. அதில் பிப்ரவரி 18 ஆம் தேதி தொடங்கவுள்ள டி-20தொடரில் பங்கேற்கவிருக்கும் வீரர்கள் விவரம் நேற்று (ஜனவரி 28) வெளியானது.

கடந்த பிப்ரவரி (2017) மாதம் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடரில் விளையாடிய பின்னர் உடல் திறன் சார்ந்த யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறத் தவறியதால் சுரேஷ் ரெய்னாவிற்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன் பின்னர் சிறப்பாகப் பயிற்சி மேற்கொண்டு யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்ற பின்னரும் அவரை ஒருநாள் தொடரிலும் தேர்வு செய்யவில்லை. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் அவர், சமீபத்தில் இரண்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து அசத்தியிருப்பதால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி-20 அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே கடந்த சில மாதங்களாக இருந்துவருகிறது. மனிஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியுள்ளார். இந்நிலையில் ரெய்னா அணிக்குத் திரும்புவதால் அவர் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018