மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

மின்னம்பலம் வாசகருக்கு ஸ்மார்ட்போன் பரிசு!

ஜனவரி 25ஆம் தேதி தொடங்கிய திருப்பூர் புத்தகக் காட்சி பிப்ரவரி 4ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

திருப்பூர் பின்னல் புத்தக அறக்கட்டளை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 15ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா பத்மினி கார்டனில் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 145 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 55 முன்னணி பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் உட்பட மொத்தம் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன.

இதில் அரங்கு எண் 130இல் தமிழின் முதல் மொபைல் பத்திரிகையான மின்னம்பலம் இடம்பிடித்திருக்கிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் புத்தக் காட்சியில் வாசகர்களும் நம் அரங்கிற்கு வந்து நம் பத்திரிகை சம்பந்தமாகவும் பதிப்பகம் சார்ந்தும் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டு செல்வதோடு புத்தகங்களையும் வாங்கிச் செல்கின்றனர்.

சென்னைப் புத்தகக் காட்சியில் வாசகர்களை ஊக்குவிக்கும்விதமாக நடத்தப்பட்ட ஸ்மார்ட் போன் பரிசுத் திட்டம் திருப்பூர் புத்தகக் காட்சியிலும் தொடர்கிறது. அந்த வகையில் நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற குலுக்கலில் திரு. தமிழ்ச் செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருப்பூர், RVE LAYOUT நகரைச் சேர்ந்த இவர் துணி வணிகம் மேற்கொண்டு வருகிறார். இவருக்கான MI 4A மாடல் ஸ்மார்ட்போன் இன்று 11 மணியளவில் வழங்கப்பட்டது. இந்த பரிசை கௌரா புத்தகக் குழுமத்தின் நிறுவனர் திரு. ராஜ சேகரன் வழங்கிச் சிறப்பித்தார்.

இது குறித்து தெரிவித்த தமிழ்ச் செல்வன், “இந்த பரிசு எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

மின்னம்பலம் பத்திரிகை பற்றி கருத்து தெரிவித்த அவர், “நான் பொதுவாக இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகளைத் தான் படிப்பேன். நேற்று தான் மின்னம்பலம் பற்றி அறிமுகப்படுத்தினார்கள். தொடர்ந்து இரண்டு நாளாக படித்து வருகிறேன். ரொம்ப நன்றாக இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் குடும்பத்துடன் படிக்கக்கூடிய பத்திரிகையாக இருக்கிறது” என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018