மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

பரவசத்தில் பத்மாவதி வசூல்!

பரவசத்தில் பத்மாவதி வசூல்!

இராமானுஜம்

மிகுந்த சர்ச்சைகளையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் சந்தித்த படம் பத்மாவதி. படத்தைத் திரையிடத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் படத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துவந்த நிலையில் ஜனவரி 25 அன்று உலகம் முழுவதும் பல மொழிகளில் பத்மாவதி ரீலீஸ் ஆனது. இந்தியாவில் குறிப்பிட்ட சில வட மாநிலங்களில் படத்தைத் திரையிட முடியவில்லை.

இந்தியில் சுமார் 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கிறார். இவர் இயக்கத்தில் ஏற்கெனவே வந்த கா மோஷி, பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்கள் வண்ணமயமான அனுபவத்தையும், மனதுக்குக் கொண்டாட்ட உணர்வையும் கொடுத்த படங்கள்.

பத்மாவதி படத்தை வெளியிட இவர் சந்தித்த போராட்டங்களுக்குப் பலனாக, தியேட்டர்களில் பண மழை பொழிந்து பரவசப்படுத்தியிருக்கிறது.

வழக்கம் போல் இந்த வாரம் (26.01.2017) மூன்று தமிழ்ப் படங்களும் ஒரு டப்பிங் படமும் ரீலீஸ் ஆனது. பத்மாவதி குறைவான தியேட்டர்களில் ரீலீஸ் ஆனது. தொடக்க நாள் காட்சியிலிருந்து பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் படமாக பத்மாவதி பண மழையில் நீச்சலடித்துவருகிறது. குறிப்பாக சென்னை, புறநகர், கோவை ஏரியா ஆகிய பகுதிகளில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக கடந்த நான்கு நாட்களாக ஓடியுள்ளது பத்மாவதி.

தமிழ் நாட்டில் அதிகமான திரைகளை ஆக்கிரமித்த நிமிர், மன்னர் வகையறா, பாகமதி படங்கள் வசூல் செய்த மொத்த தொகையைவிட, குறைவான திரைகளில் வெளியான பத்மாவதிக்கு வசூலான தொகை அதிகம். சுமார் 8 கோடி மொத்த வசூல் ஆன பத்மாவதி எதிர்வரும் நாட்களில் குடும்பங்கள் வருகையால் கூடுதலான வசூலைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது தியேட்டர் வட்டாரம்.

தமிழகம் மட்டுமின்றி பத்மாவதி திரையிடபட்டுள்ள அனைத்து இடங்களிலும் இதே நிலைதான். 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 29 ஜன 2018