மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

சென்னை விமான நிலையம்: வாலிபர் தற்கொலை!

சென்னை விமான நிலையம்: வாலிபர் தற்கொலை!

சென்னை விமான நிலையப் பாலத்தில் இன்று (ஜனவரி 29) காலை வாலிபர் ஒருவர் திடீரெனக் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், கார் மற்றும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்காகப் பாலம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.45 மணி அளவில் பயணிகள் வருகை பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் நின்றுகொண்டிருந்தார். பார்ப்பதற்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்ற தோற்றம் கொண்ட அந்த வாலிபர், தரை தளத்தில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் உள்ள இந்தப் பாலத்திலிருந்து திடீரெனக் கீழே குதித்தார். இதில் உடல் சிதறிய அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இது பற்றித் தகவல் கிடைத்ததும் விமான நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018