மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

வெளியுறவுத்துறை செயலாளராக கோகலே பதவியேற்பு!

வெளியுறவுத்துறை செயலாளராக கோகலே பதவியேற்பு!

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்துவந்த ஜெய்சங்கர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, புதிய வெளியுறவுத்துறை செயலாளராக அறிவிக்கப்பட்ட விஜய் கோகலே இன்று (ஜனவரி 29) பதவியேற்றார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்துவந்த ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்படுவார் என்று ஜனவரி 1ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இன்று வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவி ஏற்றார் கோகலே. இவர், இந்தப்பதவியில் இரண்டு ஆண்டு காலம் நீடிப்பார்.

1981ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அதிகாரியான இவர், முதன்முதலாக ஹாங்காங் சென்று பணியாற்றினார். சீனா, ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட பல நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு. கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா – இந்தியா இடையே டோக்லாம் எல்லையில் பிரச்சனை ஏற்பட்டபோது, அதனைத் தீர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் கோகலே. இவரால்தான், 72 நாட்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்தது. அதுவே, இப்போது இந்திய வெளியுறவுத்துறையின் பலமாக இவரைப் பார்க்கவும் காரணமாகியிருக்கிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018