கூகுள் குரோம் வழங்கிய மியூட்!

கூகுள் குரோமில் தானாக பிளே ஆகும் ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றினை நிறுத்தம் செய்துகொள்ள புதிய அப்டேட்டினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் பிரபலமான தேடுதளமான கூகுள் குரோமில் மியூட் (mute) என்ற புதிய வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம் ஒரு வலைதளத்திற்கு செல்லும் பொழுது அதில் தேவையில்லாது ஆடியோ மற்றும் வீடியோ என இடையே தானாக இயங்குவதால் நெட்வொர்க் பயன்பாடு வீணாகிறது. இதுபோன்ற விளம்பரங்களைத் தடுக்கப் பல்வேறு அப்ளிகேஷன்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுவந்தாலும், வலைதளத்திற்குள்ளே இதுபோன்ற வசதி வெளியானதில்லை.