பாகமதி: மிரட்டலான மேக்கிங் வீடியோ!

அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருக்கும் பாகமதி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியிருக்கிறது.
அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி படங்களின் வரிசையில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் பாகமதி. திகில், காமெடி, அரசியல் த்ரில்லர் ஆகிய கலவைகளில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது.
ஆளும்கட்சியின் அமைச்சரான ஜெயராமின் பதவியைக் குறிவைத்துத் தொடுக்கப்படும் விஷயத்தில், அவருக்குப் பல வருடங்களாக செகரெட்ரியாகப் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனுஷ்காவை பழைய அரண்மனையில் அடைத்துவைத்து விசாரணை மேற்கொள்கையில் அமானுஷ்ய சக்தியால் பாகமதியாக மாறி மிரட்டுவதே இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக இருப்பது அந்த அரண்மனைதான். எனவே அந்த அரண்மனை உருவாக்கிய விதம், அங்கு அனுஷ்காவின் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் ஆகியவற்றின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சியை எடுக்கப் படக்குழு மேற்கொண்ட கடின உழைப்பும், அனுஷ்காவின் ஆச்சரியமூட்டும் நடிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுவருகிறது.