ஹாலிவுட்டில் நடிக்க ஆசை: ரன்வீர் சிங்


ஹாலிவுட்டில் ஏதாவது ஒரு படத்திலாவது நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார் நடிகர் ரன்வீர் சிங்
பல தடைகளுக்குப் பின் வெளியான பத்மாவத் படத்தில் கொடூர வில்லனாக அலாவுதீன் கில்ஜியின் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பவர் ரன்வீர் சிங். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட இப்படத்தில் ஹீரோயின் தீபிகாவைவிட ரன்வீர் சிங்கின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டுவருகிறது.
2010ஆம் ஆண்டு வெளியான பேண்ட் சர்மா பாராத் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரன்வீர் சிங். இந்தப் படத்தில் ரன்வீருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷர்மா நடித்திருப்பார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 2013ஆம் ஆண்டு வெளியான ராம் லீலா படத்தில் ரன்வீரும் தீபிகாவும் ஜோடியாக நடித்தனர். அதிலிருந்து இவர்கள் இருவர் நடிப்பில் வெளிவரும் படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.