மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்!

கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம்!

2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நிதியமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு மற்றும் 2017 ஜூலையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகிய நடவடிக்கைகளால் 2018-19 நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவிகிதமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதற்கு முந்தைய 4 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் தேவோஸ் நகரில் சென்ற வாரம் நடந்த உலகப் பொருளாதார மன்ற உச்சி மாநாட்டில், 2025ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் பொருளாதார மதிப்பு ரூ.5 லட்சம் கோடியாக உயரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார். இதையடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் 2018-19 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018