மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 29) முதல் தொடங்குகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்த ஆண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார் . குடியரசுத் தலைவர் பொறுப்பேற்ற பிறகு, நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

வரும் பிப்ரவரி 1ஆம் தேதியன்று, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைவதால், அடுத்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டையே மத்திய பாஜக அரசினால் தாக்கல் செய்ய முடியும். ஆகவே, பொதுமக்களை ஈர்க்கும் திட்டங்களை இந்த பட்ஜெட்டில் அருண் ஜேட்லி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. ரயில்வே பட்ஜெட்டையும் அவரே தாக்கல் செய்வார் என்பதால், ரயில் பயணக் கட்டணத்தில் மாற்றங்கள் இருக்குமா என்ற சந்தேகமும் மக்கள் மனதில் நிலவுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி இன்று தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது பகுதி, மார்ச் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 29 ஜன 2018