மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

இன்று மறியல் போராட்டம்!

இன்று மறியல் போராட்டம்!

திட்டமிட்டபடி இன்று மறியல் போராட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரசுப் பேருந்துகளின் கட்டணங்களை இரண்டு மடங்குக்கு மேல் உயர்த்தி கடந்த 19ஆம் தேதி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தக் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்த நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்ட அறிவிப்புகள் வெளியிட்டன.

திமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ஒருநாள் கெடு விதித்தனர். அதற்குள் கட்டண உயர்வைத் திரும்பப் பெறவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் அறிவித்தார். மேலும் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அரசின் சார்பில் கட்டண உயர்வு சற்றே குறைக்கப்படுவதாக அறிவிக்கபட்டது.

தொடர்ந்து நேற்று (ஜனவரி 28) சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அவசர அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருநாவுக்கரசர், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன், மதிமுகவின் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து அரசுக்கு எவ்வகையில் அழுத்தம் கொடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “பேருந்துக் கட்டணம் பெயரளவில் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தியுள்ளனர். இது தவறானது, பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய அளவில் ஏற்கெனவே திட்டமிட்டப்படி மறியல் நடத்த இன்றைய கூட்டத்தில் முடிவு செய்து இருக்கிறோம். நாளைய தினம் திட்டமிட்டபடி நடத்தும் மறியல் போராட்டத்திலும் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தவுள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும், “இரண்டு நாள்கள் பொறுத்து அரசின் நிலைப்பாட்டைப் பார்த்து மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்” என்றும் கூறினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018