தினம் ஒரு சிந்தனை: புத்தகம்!


ஒரு சிறந்த புத்தகத்தைப் படித்து முடிப்பது என்பது ஒரு நல்ல நண்பரைப் பிரிவதைப் போன்றது.
- வில்லியம் ஃபெதர் (25 ஆகஸ்ட் 1889 - 7 ஜனவரி 1981). அமெரிக்காவைச் சேர்ந்த பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர். தனது பெயரிலேயே பத்திரிகை ஒன்றைத் தொடங்கி அச்சு வணிகத்தில் வெற்றிகரமாக விளங்கியவர். தனது பத்திரிகையில் எழுதுதல் மற்றும் வெளியிடுதல் போன்றவை தவிர, பிற இதழ்களிலும் ஆர்வமுடன் தனது எழுத்துப்பணியை மேற்கொண்டார். மேலும், பல புத்தகங்களை எழுதியுள்ளார்.