மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

ஃபேஸ்புக்கைக் கண்காணிக்கும் துர்கா ஸ்டாலின்!

ஃபேஸ்புக்கைக் கண்காணிக்கும் துர்கா ஸ்டாலின்!

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்தைத் தினமும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பார்வையிடுவதாகச் சொல்லப்படுகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், கடந்த ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வளர்ந்துள்ளன. சமூக வலைதளத் தொழில்நுட்பத்தைச் சிரமமாகக் கருதியவர்களும்கூட, இப்போது வேறு வழியில்லாமல் அதோடு தங்களை இணைத்துக்கொள்கின்றனர். இதில், எந்த வேறுபாடும் இல்லை. அந்த வகையில், கட்சித் தொண்டர்கள் வழி நடப்பது, இப்போது கட்சிகளின் வழக்கமாகிவிட்டது. இந்தியாவிலுள்ள பெரும்பாலான கட்சிகள் சமூக வலைதளங்களைத் தங்களது பிரசாரக் கருவிகளாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன.

கொள்கை பரப்புச் செயலாளர்கள், பேச்சாளர்கள் கட்சித்தூண்களாக இருந்த காலம் மலையேறி நெடுநாளாகிவிட்டன. எந்தக் கட்சியானாலும், அதன் செயல்பாடுகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை நம்பியே உள்ளது. இதை நன்கு உணர்ந்திருக்கிறார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் துணைவியார் துர்கா.

தினமும், இவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்து வருகிறார் என்கின்றனர் திமுக தொண்டர்கள். அவரது பக்கத்தில் குற்றங்கள் ஏதேனும் இருந்தால், அதைக் கண்காணித்து உடனடியாகக் கணவரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறாராம். இதற்காகவே, ஸ்டாலினின் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தகவல்களைத் தொடர்ச்சியாகப் பார்வையிடுகிறாராம் இவரது தங்கை ஜெயந்தி. கட்சி நடப்புகள் அனைத்தும் ஜெயந்தியின் மூலமாக ஸ்டாலினுக்குச் சொல்லப்படுவதை அறிந்த உடன்பிறப்புகள், இப்போது அவரது பக்கத்துக்கு ‘ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்’ அனுப்பி வைக்கின்றனராம்.

ஒவ்வொரு தெருவிலும் கொடியை நட்டு திமுக எனும் கட்சியை வளர்த்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். கட்சியின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களை மட்டுமே நம்பியிருப்பதைக் கண்டு, அவர்கள் ஆடிப்போயிருக்கின்றனர். களப்பணி செய்வதைவிட, கண்ணுக்குத் தெரியாமல் காக்கா பிடிக்கும் பணிகள்தான் நடக்கிறது என்பது இவர்களது குமுறல்; இது கழகத்தைத் தொய்வு அடையச் செய்யக் கூடும் என்று கவலைப்படுகின்றனர் மூத்த நிர்வாகிகள்.

செயல்தலைவர் எப்போது களம் காணப்போகிறாரோ?

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018