மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

எது வேலைவாய்ப்பு: பிரதமருக்குக் கேள்வி!

எது வேலைவாய்ப்பு: பிரதமருக்குக் கேள்வி!

‘பக்கோடா விற்பதும் வேலைவாய்ப்புதான்’ என்று கூறிய பிரதமர் மோடியை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாள்களுக்கு முன்பு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “பக்கோடா விற்பனை செய்யும் நபர் வீட்டுக்கு ரூ.200 கொண்டு சென்றால் அதை வேலைவாய்ப்பாகக் கருத வேண்டுமா, இல்லையா?” என்று கூறியிருந்தார். பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் பாரதீய ஜனதா அலுவலகத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

பிரதமரின் பேச்சை பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல் , ‘டீக்கடைக்காரர் இப்படிதான் பேசுவார், பக்கோடா விற்பதையும் வேலைவாய்ப்பு உருவாக்கிவிட்டதாகத்தான் கருதுகிறார். நிச்சயமாக பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாமலே இருக்கிறார்’ எனக் கிண்டலடித்திருந்தார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018