மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

விக்னேஷ் சிவன் - அனிருத்: ஹாட்ரிக் கூட்டணி!

விக்னேஷ் சிவன் - அனிருத்: ஹாட்ரிக் கூட்டணி!

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அனிருத்துடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவனுக்குப் பக்கபலமே அனிருத்தான் என்று சொல்லலாம். அந்தளவுக்கு விக்னேஷ் சிவன், அனிருத் காம்பினேஷன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நானும் ரௌடிதான் படத்தின் மூலம் இணைந்த இந்தக் கூட்டணி, தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது விக்னேஷ் சிவனின் அடுத்த படத்துக்கும் இதே கூட்டணி தொடர்கிறது.

எந்தவொரு படமானாலும் தன்னுடைய ஏதாவது ஒரு பாடலின் மூலம் அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து விடுவது அனிருத்தின் ஸ்பெஷல். நானும் ரௌடிதான் படத்தில் இடம்பெற்ற தங்கமே பாடலை ரசிகர்களிடையே முணுமுணுக்க வைத்த அனிருத், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெற்ற சொடக்கு பாடல் மூலம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சொடக்கு போட்டுக்கொண்டே பாட வைத்தார். அதுமட்டுமல்லாது நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்பட்ட விக்னேஷ் சிவனைப் பாடலாசிரியராகவும் உருவாக்கி இருக்கிறார் அனிருத்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018