மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

ஐ.பி.எல் 2018: முழுமையடைந்ததா ஏலம்?

ஐ.பி.எல் 2018: முழுமையடைந்ததா ஏலம்?

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் தொடரின் 11ஆவது சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கவிருப்பதை அடுத்து, இந்த வருடத்துக்கான ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27, 28) நடைபெற்று முடிவடைந்தது.

அதில் எந்தந்த அணிகள் சிறப்பான வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர், முழு தேவைகளையும் சரிவர பயன்படுத்திய அணி எவை மற்றும் நிறைவு பெறாமல் தவிக்கும் அணிகள் எவை என்பது குறித்த தகவல்களை இங்கு காண்போம்.

சரியான வீரர்களைத் தேர்வு செய்த அணிகள்

ஒவ்வோர் அணியும் வெற்றி பெற ஒரு வீரர் மட்டும் தனியே போராடினால் நடக்காது என்பது நிதர்சனம். ஓர் அணியின் கூட்டு முயற்சியே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும். அதேசமயம் ஒரு வீரரின் திறன் அறிந்து அவரை சரியான நேரத்தில் பயன்படுத்துவதும் மிக முக்கியமான ஒன்று என்றே கூறலாம். இவை அனைத்தையும் கவனத்தில்கொண்டு அணியைத் தேர்வு செய்யவே அனைத்து அணிகளும் கடந்த இரண்டு நாள்களாக முயற்சி செய்து வந்தன. இருப்பினும் அனைத்து அணிகளுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை என்பது உண்மை.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மட்டுமே அணியின் தேர்வைச் சரியாக மேற்கொண்டனர். அணிக்குத் தேவையான பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என எல்லாவற்றிலும் முழுமை பெற்றுள்ளனர். பிற அணிகளான மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இன்னும் அணியை முழுமைப்படுத்தாமல் வைத்துள்ளனர்.

கீப்பிங் மட்டும் பந்துவீச்சை இழந்த பஞ்சாப்

ஏலம் எடுக்கப்பட்ட அணிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ள அணிகளில் ஒன்றாக பஞ்சாப் உள்ளது. எனவே, பேட்டிங்கில் இந்த அணியை எந்தவித குறையும் கூற இயலாது. கடைசியாக ரூ.2 கோடிக்கு அதிரடி மன்னன் க்றிஸ் கெயில்லையும் இந்த அணி பெற்றுள்ளது. எனவே, பேட்டிங்கில் அதிக வலிமையுள்ள அணியாக இது திகழ்கிறது. இருப்பினும் வேகப்பந்து வீச்சை எடுத்துக்கொண்டால் அன்ட்ரூ டை மற்றும் மோஹித் ஷர்மாவை தவிர வேறு யாரையும் அதில் குறிப்பிட்டு கூற இயலாது. அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பர் என ஒருவரை பஞ்சாப் அணி மறந்தே விட்டது. இறுதி வரை தனியே விக்கெட் கீப்பரை ஏலம் எடுக்கவில்லை. லோகேஷ் ராகுல் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்துள்ளார். எனவே, அவரைப் பயன்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் அவருக்கு மாற்று வீரராக ஒரு விக்கெட் கீப்பரும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சீசன் வரையும் பஞ்சாப் அணி சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டிருந்தது. ஆனால், பந்து வீச்சில் சொதப்பியதால்தான் தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வந்தது. அதனால் இந்த முறை பந்து வீச்சாளர்கள்மீது ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் பேட்ஸ்மேன்களை மட்டும் சிறப்பாகத் தேர்வு செய்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

உறவினரைச் சேர்த்த சேவாக்

அதுமட்டுமின்றி பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவரும் சேவாக்கின் உறவினர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ஐ.பி.எல்லில் அனுபவமுள்ள பல்வேறு விக்கெட் கீப்பர்கள் குறைந்த ஏலத்தொகைக்குக் கிடைக்கப்பெற்ற போதும் அவர்களைத் தேர்வு செய்யாமல் இருந்ததும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.

தொடக்கம் இழந்த மும்பை

மும்பை இந்தியன் அணியைப் பொறுத்தவரை நடப்பு சாம்பியன் என்பதால் அதன் நிலையை தக்கவைத்துக் கொள்ள அதிகம் போராட வேண்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சிறப்பான தொடக்கம் அமைத்துக்கொடுத்த வீரர்களை இந்த முறை மும்பை அணி ஏலம் பெற தவறி உள்ளது. இப்போதுள்ள அனைத்து வீரர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பெரும்பாலான வீரர்கள் மூன்றாவது விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்குபவர்கள் என்பது தெளிவாகிறது. எனவே, அணியில் வெளிநாட்டு வீரரைத் தொடக்கத்தில் இறக்கினால் பின் பந்து வீச்சில் மும்பை அணிக்கு சிக்கல் ஏற்படும். ஏனெனில் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம். ஆனால், அவர்களால் சிறப்பான தொடக்கத்தை வழங்க முடியாத நிலையில் மும்பை அணியின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

ஆர்வத்தால் முக்கிய வீரர்களைத் தொலைத்த ராஜஸ்தான்

இந்த வருடம் அதிகம் விலை கொடுத்து பெறப்பட்ட வீரர் பென் ஸ்டோர்க்ஸ் (ரூ.12.5 கோடி), அதேபோல் இந்திய வீரர்களில் அதிக விலை கொடுத்து பெறப்பட்ட வீரர் ஜெயதேவ் உணத்கட் (ரூ.11.5 கோடி). இவ்விருவரையும் ராஜஸ்தான் அணி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சஞ்சு சாம்சன் (ரூ.8 கோடி), ஜோப்ரா ஆர்சர் (ரூ.7.2 கோடி), கௌதம் கிருஷ்ணப்பா (ரூ.6.2 கோடி) என அதிக தொகை செலவிட்டு குறைந்த அளவிலான வீரர்களையே தேர்வு செய்த ராஜஸ்தான் அணி, முக்கியமான முன்னணி வீரர்களை ஏலம் பெற தொகை இல்லாமல் பின்னர் திணறியது.

தற்போது இந்த அணியில் பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக அமைந்துள்ள நிலையில் பந்து வீச்சாளர்கள் பலர் புதுமுகமாக உள்ளதால், அவர்களின் ஆட்டம் எவ்வாறு இருக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இனி அணிகள் தேர்வு செய்த வீரர்கள் பட்டியலைக் காண்போம்

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

டெல்லி டேர்டெவில்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ராஜஸ்தான் ராயல்ஸ்

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 29 ஜன 2018