மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

தாத்தா பாட்டி

இன்றைய தலைமுறை குழந்தைகள் பெரிதும் இழந்திருப்பது தாத்தா பாட்டிகளைத்தான் என்று நினைக்கிறேன். பொருள் தேடும் வாழ்க்கைமுறை, தனிநபர் சார்ந்த எண்ணங்கள் என்று பல்வேறு காரணங்கள் அதற்கு சொல்லப்பட்டாலும் முதியவர்களின் இருப்பே குழந்தைகளைப் பொறுத்தவரையில் ஒரு ஷாக்அப்ஸார்பராக இருப்பதை இன்றும்கூட சில குடும்பங்களில் காண முடிகிறது..

என்னதான் அம்மாக்களும் அப்பாக்களும் பாசத்தையும் அறிவையும் கொட்டி வளர்த்தாலும் இருபத்தியொரு வயது நிரம்பும் வரை எல்லோருக்குமே ஒருவித கொஞ்சல்ஸ் தேவைப்படுகிறது. அம்மா அப்பாக்கள் இதை செய்தாலும் குழந்தைகள் அதை ஒருவித பிரதிபலன் எதிர்பார்க்கக்கூடிய ஒரு சராசரி நிகழ்வாகத்தான் பார்க்கிறார்கள்.

அது தாத்தா பாட்டியிடம் வரும்போது அந்த அன்பு அவர்களுக்கு நிபந்தனையற்று எதிர்பார்ப்பற்று தெரிகிறது. குறிப்பாக வளரும் வயதில் பன்னிரண்டு முதல் பதினெட்டு வரை முதியவர்களின் பங்கு மிக முக்கியமானது.

ஏனென்றால் பருவ வயது பல ரசாயன மாற்றங்களுக்குட்பட்டது. எதிர்மறை கேள்விகள் அதிகம் தோன்றும் நேரம் இது. இந்த நேரங்களில் பெற்றோர்களுடன் அனுசரித்துப் போனதென்றால் ஏதோ சரியில்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அநேகமாக தாய் தந்தை இருவருமே தங்கள் நடுத்தர வயதில் இருப்பதால் பொருளாதார, உடல் ரீதியில் பல அழுத்தங்களுக்கு ஆளாகும் காலகட்டம் இது. அந்தச் சூழ்நிலையில் குழந்தைகளின் ஒவ்வொரு செய்கையும் பெற்றோருக்கு தவறாகவே தோன்றும்.

பல குடும்பங்களில் நிம்மதியே பறி போனது போன்றே தோன்றும். படுத்த படுக்கையைக்கூட எடுத்து வைக்க மாட்டேங்கறா, எப்ப பார்த்தாலும் செல்போன், அப்படி என்னதான் பேசுவாளோ ராத்திரி ஒரு மணி வரைக்கும், அவங்கவங்க துணியை அவங்களே மடிச்சு வெச்சுக்கக் கூடாதா, இதெல்லாம் கூடவா சொல்லித்தரணும், இந்த குழந்தைகளுக்கு என்னிக்குத்தான் பொறுப்பு வருமோ என்று நகரத்து பெற்றோர் எல்லோர் மனதில் அன்றாடம் எழும் கேள்விகள் தாம் இவை.

அதே குழந்தைகளிடம் தாத்தாவுக்கு என்ன வேணும்னு கேளு என்று சொல்லிப்பாருங்கள். உடனே செய்யும். அவருக்குக் கட்டில் மேல் மெத்தை விரித்து போர்வையைப் பாங்காக எடுத்துக்கொடுக்கும்.. ஆச்சர்யமாக இருக்கும், நரம்புகள் தளர்ந்து போயிருக்கும் பாட்டியின் கால்களுக்கு இதமாக தைலம் தடவி கொடுப்பார்கள். புவனேஷ்வர் குமாரையும், ரஹானேயையும் அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று அப்பாவுடன் வாதாடினால் ஐம்பது வயது அப்பா அதை தர்க்க ரீதியாக அணுகித்தான் பதில் கொடுப்பார்.

அதே எழுபது வயது தாத்தா, நீ ரொம்ப நல்லா அனலைஸ் பண்றப்பா என்று பாராட்டுவதோடு மட்டுமல்லாது ஆபீஸிலிருந்து திரும்பி வரும் அவர் பையனிடம் கௌஷிக் கிரிக்கெட்டை என்னம்மா அனலைஸ் பண்ணி வெச்சிருக்கான், எல்லா ரெக்கார்டும் விரல் நுனியில் வெச்சுருக்காம்பா என்று சொல்வதில் பெரியவருக்கு ஒரு நிஜமான சந்தோஷம் இருக்கும். பேரனுக்கும் இயற்கையான அந்தப் பாராட்டும் சூழல் பிடிக்கும். பிடிவாதம், மூர்க்க குணங்கள் என்று இருக்கும் டீனேஜர்களுக்கும்கூட தாத்தா பாட்டிகளின் அரவணைப்பு ஒரு பெரிய வடிகால்.

சமயத்தில் குழந்தைகளும் தாத்தா பாட்டிகளைக் கோபித்து கொள்வார்கள், ஏதேதோ சொல்லக்கூடும். ஆனால், அவை மனதிலிருந்து வருபவையல்ல. குழந்தைகளிடத்தில் தவறுகள் இல்லை. பெற்றோர்களுக்குத்தான் தாத்தா பாட்டிகளின் மகத்துவம் தெரிவதில்லை. வளரும் வயதில் தாத்தா பாட்டிகளுடன் வாழும் குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள்தான்.

உண்மைதான், சரி.. தாத்தா பாட்டி கதையெல்லாம் நல்லா இருக்கு, ஆண்டாள் கதையெல்லாம் முடிஞ்சது. லைட்டை அந்தப் பக்கம் திருப்புங்க.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018