மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்!

பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்!

‘ஆன்லைன் தேர்வை ரத்து செய்யும் வரை பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்’ என்று மத்தியப்பிரதேச ஐடிஐ மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் ஆளுநராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 26ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மத்தியப்பிரதேசம் இஸ்தாரி நகரில் விஜயலட்சுமி தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில், ஆன்லைன் தேர்வுகள் நிறுத்தப்படும் வரை பாஜகவுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது என்று மாணவர்களை ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்க வைத்தனர். ஆன்லைன் தேர்வு முறையால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் ஒரு நிமிட காணொளியும் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த வீடியோவில் பாஜக நடத்தும் எந்தவொரு நிகழ்வுக்கும் தன்னார்வலராகவோ அல்லது செயற்பாட்டாளராகவோ செயல்பட மாட்டோம் என்றும், மேலும் இந்தத் தகவலை அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று பேரிடமாவது கூறி மனமாற்றுவேன் என்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் ஒன்பது இடங்களில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018