மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

கடல் பொருள்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்!

கடல் பொருள்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி மதிப்பு 6 மில்லியன் டாலரை மிஞ்சும் எனக் கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எம்.பி.இ.டி.ஏ) தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தியாவின் சர்வதேச கடல் உணவுக் காட்சி ஜனவரி 27 முதல் 29 வரை கோவாவில் நடைபெறுகிறது. நடப்பு நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி 6 மில்லியன் டாலரை மிஞ்சும் எனக் கோவாவில் நடைபெறும் சர்வதேச கடல் உணவுக் காட்சியில் கடல்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எம்.பி.இ.டி.ஏ) தெரிவித்துள்ளது. மேலும் கடல் சார் பொருள்களின் ஏற்றுமதி அடுத்த சில ஆண்டுகளில் ரூ.50,000 கோடி வரை அதிகரிக்கும் என இந்தியக் கடல் உணவுத்தொழில் பங்குதாரர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இக்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், “கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் ஆந்திர மாநிலம் கலாசார மீன்பிடித் துறையில் முன்னேறி உள்ளது. மேற்கு கடலோர பகுதிகள் உள்ள மாநிலங்கள் எம்.பி.இ.டி.ஏவுடன் இணைந்து கடல் சார் பொருள்கள் ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும் அந்தமான் மற்றும் நிக்கோபார் போன்ற தீவுகளையும் மீன்பிடி தொழிலில் அதிகம் ஈடுபடச் செய்வதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும். நிலையான ஆழ்கடல் மீன்பிடிப்பு வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். ரசாயன உரக்கழிவால் கடல் நீர் மாசுபடுவது, மீன்பிடி மண்டலங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவது, மீன்களின் இனப்பெருக்க நிலங்கள் ஏற்படும் சேதம் ஆகியவற்றைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை மேற்கொண்டால் இந்தியாவின் ஏற்றுமதியை இருமடங்காக உயர்த்த முடியும். இன்னும் சில ஆண்டுகளில் கடல் ஏற்றுமதியில் சீனா, நார்வே, வியட்நாம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா உருவாகும்” என்றார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018