மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

பியூட்டி ப்ரியா: கண்ணோடு பேசலாம்...

பியூட்டி ப்ரியா: கண்ணோடு பேசலாம்...

இன்றைய வாழ்க்கை சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகள்கூட கண்ணாடி அணிய வேண்டிய நிலை உண்டாகிறது. கண்பார்வையைத் தெளிவாக வைக்க தினசரி சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

உங்களது அன்றாட வாழ்க்கையில் பச்சை காய்கறிகள், கேரட், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். ஆனால், நாம் இப்போது ஜங்க் உணவுகளுக்கு அடிமையாகிவிட்டோம். இதனால்தான் பல வகையான ஆரோக்கிய பிரச்னைகள் உண்டாகின்றன. நீங்கள் கண் பார்வையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக உங்களது கண் பார்வையைத் தெளிவாக்கலாம்.

நெல்லிக்காய்:

கடுக்காய்த் தோல், நெல்லிக்காய் இரண்டையும் கொட்டை நீக்கிக் காயவைத்து இடித்து பொடி செய்து தினமும் மூன்று கிராம் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை ஆற்றல் அதிகரிக்கும். கண் குளிர்ச்சி பெறும்.

அன்னாசிப்பழம்:

அன்னாசிப்பழத்தை எடுத்து தோல்களைச் சீவி சுத்தம் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

சீரகம்:

சம அளவு சீரகம், கொத்தமல்லி விதை மற்றும் வெல்லம் ஆகிய மூன்றையும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி, சலித்துக்கொண்டு காலை, மாலை இந்தப் பொடியைச் சாப்பிட்டு தன்ணீர் குடித்துவந்தால் கண் பார்வை தெளிவாகும்.

பொன்னாங்கண்ணி:

பொன்னாங்கண்ணி இலையை சிறிதளவு எடுத்து காலையில் மென்று தின்று பின்பு பால் குடித்துவந்தால் கண்பார்வை தெளிவாகும்.

அருநெல்லி:

அருநெல்லிக்காயை வடகம் செய்து சாதத்துடன் சாப்பிட்டுவந்தால் தேகத்துக்குக் குளிர்ச்சியும் கண்களுக்குப் பிரகாசமும் கிடைக்கும்.

செண்பகப்பூ:

செண்பகப் பூவை எடுத்து கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அருந்திவந்தால் கண் பார்வை தெளிவடையும்.

செவ்வாழை:

வாழைப்பழங்களிலேயே மிகவும் சிறந்தது செவ்வாழைதான். இதில் அதிகப்படியான சத்துகள் உள்ளன. கண் பார்வை தெளிவாக செவ்வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட, கண் பார்வை குறைப்பாடு குறையும்.

வெயிலில் கண்கள் கலங்கி மிகவும் சோர்வாக உள்ளதா? சிறிதளவு பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை மூடிக்கொண்டு மேல் பாதியில் அப்படியே பலமுறை ஒத்தி எடுக்க வேண்டும். பிறகு இப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடங்கள் இருக்க வேண்டும்.

இதற்குப் பிறகு கண்கள் புது ஒளி பெற்றுவிடும். வெள்ளரிக்காயைத் துருவி மெல்லிய துணியில் கட்டிக்கொள்ளவும். அதைக் கண்களை மூடிக்கொண்டு மேலே வைத்து ஒற்றி எடுக்கவும். கண்கள் புத்துணர்ச்சி பெறும்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

திங்கள் 29 ஜன 2018