மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த ரவுடிகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்த ரவுடிகள்!

விழுப்புரம் மாவட்டத்தில் ரவுடிகள் எண்ணிக்கையும் திருட்டுகளும் பெருமளவில் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார் கடலூர் மத்திய சிறையில் உள்ள கிரிமினல் குற்றவாளி ஒருவர்.

மத்திய சிறைகள் அமைந்துள்ள மாவட்டத்தில்தான் அரசு மருத்துவமனைகளில் கான்வென்ட் வார்டு (கைதிகள் பகுதி) இருக்கும். கடலூர் மத்திய சிறையிலுள்ள கைதிகளில் கால் கை முறிந்த நிலையில் அடிக்கடி கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுபவர்கள் பெரும்பாலும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கைதிகளாகவே இருக்கிறார்கள்.

சமீபத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு கைதியைப் பார்த்து டாக்டர், ‘என்னப்பா விழுப்புரம் மாவட்டத்து கைதியா நீ?’ என்று கேட்டதும் விசாரணை கைதி மிரண்டு போய் விட்டார். ‘எப்படி சார் கண்டுபிடிச்சீங்க’ என்று கைதி கேட்க, ‘இதுபோல் கை கால் உடைந்து, வரக்கூடிய கைதிகள் எல்லாம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவேதான் இருக்கிறார்கள்’ என்று சொன்னார்.

‘இப்போது அதிகமாக கைதிகள் வருவதில்லையே ஏன்?’ என்று கேட்டார் டாக்டர். அதற்கு கைதி, ‘விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இனிமேல் அதிகம் பேர் வரமாட்டார்கள்’ என்று அதற்கான காரணத்தையும் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் என்றாலே ரவுடிகள் கொடிகட்டி பறந்த மாவட்டமாக இருந்தது. இப்போது வந்துள்ள எஸ்.பி. ஜெயக்குமார் ரவுடிகளைப் பிடித்து வழக்கு போடுவதைவிட சிறைக்கு அனுப்பி வைக்க சொல்லி விடுகிறாராம்.

மேலும், விழுப்புரம் மாவட்டக் காவல்துறையிடமிருந்து கொலை மற்றும் திருட்டு வழக்கில் மட்டும் தப்பிக்கவே முடியாது. எப்படியாவது கண்டுபிடித்து அடுத்தமுறை தவறு செய்யாத அளவுக்குத் தண்டனை கொடுப்பதால் தற்போது விழுப்புரத்தில் திருட்டுகளும் ரவுடிகளும் குறைந்துள்ளதாகக் கூறியுள்ளார் கைதி.

விழுப்புரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கும்போது சிறை கைதிகளுக்கான தனி வார்டு வசதி இல்லையா என்று அம்மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம், “தமிழகத்தில் மத்திய சிறைகள் குறைவாகவே உள்ளது, குற்றவாளிகள்தான் அதிகரித்துவிட்டார்கள். இப்போதுதான் கடலூரிலுள்ள மத்திய சிறையைப்போல் விழுப்புரம் மாவட்டத்தில் கானை என்ற ஊரில் மத்திய சிறையைக் கட்டிவருகிறார்கள். மத்திய சிறைகள் உள்ள மாவட்டத்தில்தான் கான்வென்ட் பகுதி இருக்கும்” என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் திருட்டுப் போனவை முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லும் மாவட்ட போலீஸார், மாவட்டத்தில் ஆளும்கட்சிப் பெயரை சொல்லி, பொறுப்பில் உள்ளவர்கள் மணல் கொள்ளைக்குத் துணைபோனால், அவர்கள் யாராக இருந்தாலும் அஞ்சாமல் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்து, ஆசாமிகளைச் சிறைக்கு அனுப்புவதால் மணல் கொள்ளையும் இல்லை என்கிறார்கள்.

எஸ்.பி. ஜெயக்குமார் போல ஆளும்கட்சியினர் தவறுகளுக்குத் துணைபோகாமல் நேர்மையாகப் பணிகள் செய்தாலே பல குற்றங்களைத் தடுக்கலாம். அரசுக்கும் ஆட்சிக்கும் மக்கள் பாராட்டுகளும் கிடைக்கும்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

திங்கள் 29 ஜன 2018