மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

ஹார்வர்டு தமிழ் இருக்கை: ஒளிப்பதிவாளர் வெற்றி நிதியுதவி!

ஹார்வர்டு தமிழ் இருக்கை: ஒளிப்பதிவாளர் வெற்றி நிதியுதவி!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி.

380 ஆண்டு பழைமை வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகில் உள்ள மொழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கென இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழிக்கென்று தனி இருக்கை அமைக்க அமெரிக்கா வாழ் மருத்துவர்களான சம்பத், ஜானகிராமன் ஆகிய இருவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் வெற்றி. இவர் ஏர்முனை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன்மூலம் விவசாயம் மீது பற்றுள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். இவர் தற்போது தன்னுடைய ஏர்முனை அமைப்பின் சார்பாக ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதுகுறித்த தகவலானது ஹார்வர்டு தமிழ் இருக்கையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

திங்கள் 29 ஜன 2018