மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

ஆயிரம் ரூபாய் பயண அட்டையில் மாற்றமில்லை!

ஆயிரம் ரூபாய் பயண அட்டையில் மாற்றமில்லை!

பேருந்து கட்டணக் குறைப்பைத் தொடர்ந்து மாதாந்திர பயண அட்டை ஆயிரம் ரூபாய்க்குத் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய தமிழக அரசு தற்போது குறைந்த அளவு, அதாவது பைசா கணக்கில் கட்டணத்தைக் குறைத்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு இன்று (ஜனவரி 29) முதல் அமலுக்கு வருகிறது.

போக்குவரத்துக் கழகங்களை கடும் நெருக்கடியில் இருந்து மீட்டு வரவும், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு காரணமாகவும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி மாற்றியமைக்கப்பட்டதாகத் தெரிவித்த தமிழக அரசு, பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது குறைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

கட்டணக் குறைவால் நாளொன்றுக்கு ரூ.4 கோடி இழப்பு ஏற்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 21,928 பேருந்துகள், 1,40,615 போக்குவரத்து பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. இவர்களின் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் ஆண்டுக்கு ரூ.996 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், மாதாந்திர பயண அட்டை வழக்கம் போல் ரூபாய் ஆயிரத்துக்கு வழங்கப்படும் என்றும் முதியவர்களுக்குக் கட்டணமில்லா பயண அட்டைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 29 ஜன 2018