மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்காய் - தேங்காய்ப்பால் குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்காய் - தேங்காய்ப்பால் குழம்பு!

தேவையானவை:

முருங்கைக்காய் - மூன்று

பெரிய வெங்காயம் - நான்கு

தக்காளி (பெரியது) - மூன்று

பச்சை மிளகாய் - ஐந்து

பூண்டு - ஐந்து பல்

கறிவேப்பிலை - சிறிதளவு

மிளகாய்த்தூள் - இரண்டு தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

திக்கான தேங்காய்ப்பால் - அரை கப்

கடுகு, உளுந்து, சோம்பு - தலா அரை தேக்கரண்டி

கடலை எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் நறுக்கிய முருங்கைக்காயைச் சேர்த்துப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதை தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இந்தக் கலவையில் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கி, தூள் வகைகளைச் சேர்த்து நன்றாக புரட்டவும்.

பின்னர் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகக் கொதிக்கவிட்டு, பொரித்த முருங்கைக்காயைச் சேர்த்து மூடிவைத்து சிமில் நான்கு நிமிடங்கள் வேகவிடவும்.

முருங்கைக்காய் பச்சை வாசனை போக வெந்ததும் திரட்டி வைத்துள்ள தேங்காய்ப்பாலைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சுவையான இனிக்கும் சற்றே புளிக்கும் முருங்கைக்காய் தேங்காய்ப்பால் குழம்பு சுட சுடத் தயார். இதை சூடான சிக்கடி சம்பா சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

கீர்த்தனா சிந்தனைகள்:

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

திங்கள் 29 ஜன 2018