மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 ஜன 2018

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்!

20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்!

ஆஸ்திரேலிய ஓப்பனில் வெற்றி பெற்று 20ஆவது கிராண்ட் ஸ்லாம் கோப்பையை ரோஜர் ஃபெடரர் கைப்பற்றினார்.

மெல்போர்ன் நகரில் நடைபெற்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரின் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர், ஆறாம் நிலை வீரரான குரோசியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார். முதல் செட்டை ரோஜர் ஃபெடரர் 6-2 என எளிதாகக் கைப்பற்றினார். ஆனால், இரண்டாவது செட்டில் டை பிரேக்கர் வரை கொண்டு சென்ற சிலிச் 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, போட்டியைச் சமன் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக மூன்றாவது செட்டை 6-3 என ரோஜர் ஃபெடரரும், நான்காவது செட்டினை 6-3 என சிலிச்சும் கைப்பற்றினர். எனவே போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. எனவே வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி செட்டில் சிறப்பாக விளையாடிய ஃபெடரர், சிலிச்சுக்கு வாய்ப்பு வழங்காமல் 6-1 என எளிதில் வெற்றி பெற்றுப் போட்டியைக் கைப்பற்றினார். இதனால் தனது 20ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஃபெடரர் தன்வசமாக்கினார்.

இதுவரை அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர்கள் பட்டியலில் ஃபெடரர் 20 கோப்பைகளுடன் முதலிடம் பெற்றுள்ளார். நடப்பு சாம்பியனான ஃபெடரர் மீண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

திங்கள் 29 ஜன 2018