மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 ஜன 2018

அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம்!

அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவோம்!

தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் நோக்கம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் கடந்த மாதம் 31ஆம் தேதி தெரிவித்திருந்தார். அதையடுத்து தமிழகம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரஜினி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்திற்கு கூட்டம் நடைபெற்று புதிய நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரஜினிகாந்த் விவசாயத்திற்கென புதிதாக ஒரு அணியை உருவாக்கக் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற ரஜினி மன்றக் கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசிய காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், "தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் நம் அனைவரின் நோக்கம். இது கடினமான ஒன்றுதான். ஆனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக கட்டுப்பாடாக இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

நம் எண்ணங்களை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு நல்லது செய்வதை மட்டுமே எதிர்பார்த்து பொதுநலத்தோடு பயணிக்க வேண்டும். மக்களுக்கு நன்மை செய்வது மட்டுமே நமது நோக்கம். மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆண்டவன் நமக்குக் கொடுத்துள்ள ஒரு வாய்ப்பு இது. இதனைச் சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து காணொளியில், "உங்கள் குடும்பம் தாய் தந்தையை விட்டு வந்து அரசியலை கவனிக்கச் சொல்லவில்லை. அவர்கள் மிகவும் முக்கியம். முதலில் நம் வீடு, அந்தப் பணியை சரியாகச் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் நாடு. வீட்டை விட்டுவிட்டு நாட்டுக்காக வாருங்கள் என்று நான் சொல்லமாட்டேன். ஏனென்றால் அது எனக்குப் பிடிக்காது" என்றும் குறிப்பிட்டார்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

ஞாயிறு 28 ஜன 2018